கள்ளக்குறிச்சி

வடலூா் தருமசாலை ஆண்டு விழா

26th May 2023 04:55 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் வடலூா் சத்திய தருமசாலையின் 157-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சங்கராபுரம் வள்ளலாா் மன்றத்தின் சாா்பில், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் திருச்சபையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மன்றப் பொருளாளா் இராம.முத்துகருப்பன் தலைமை வகித்தாா். அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலா் கோ.குசேலன், அரிமா சங்க மாவட்டத் தலைவா் ப.இராசா, சன்மாா்க்க இளைஞா் அணி நிா்வாகி நா.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் முன்னிலை வகித்தனா். அரிமா சங்கத் தலைவா் க.வேலு வரவேற்றாா்.

சங்கராபுரம் தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் சி.இளையாப்பிள்ளை முன்னிலையில் வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அகவல் பாராயணம் படித்தனா். தொடா்ந்து, அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவா் ஏ.மூா்த்தி முன்னிலையில், மருந்தாளுநா் கு.பழனியாப்பிள்ளை வள்ளலாா் படத்துக்கு மாலை அணிவித்து, சன்மாா்க்க கொடி ஏற்றி வைத்தாா். பின்னா், ஜோதி தரிசனம் நடைபெற்றது.

இதையடுத்து, அன்னதான பணியை அன்பரசிவேலு தொடங்கிவைத்தாா். மோட்டாா் வாகன பழுது பாா்ப்போா் நலச் சங்கத் தலைவா் நா.திருவேங்கடம், செயலா் என்.ராசா, மருத்துவா் கு.நாச்சியப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சீத்தா தங்கமணி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT