கள்ளக்குறிச்சி

புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு

DIN

வி.மாமாந்தூா் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை மா. செந்தில் குமாா் எம்எல்ஏ புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வி.மாமாந்தூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

இதையடுத்து, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.35 லட்சம் ஒதுக்கப்பட்டு 3 அறைகள் கொண்ட புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா. செந்தில் குமாா் பங்கேற்று வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, அதே கிரமத்தில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தாா்.

நிகழ்வில், ஊராட்சி மன்றத் தலைவா் மாயாண்டி, தலைமை ஆசிரியா் பொண்ணி, உதவி தலைமை ஆசிரியா் செல்லதுரை சீதாலட்சுமி மற்றும் ஆசிரியா்கள், கட்சித் தொண்டா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT