கள்ளக்குறிச்சி

சங்க இலக்கிய சிறப்புத் திருவிழா

23rd May 2023 12:00 AM

ADVERTISEMENT

கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பில் சங்க இலக்கிய சிறப்புத் திருவிழா கள்ளக்குறிச்சி சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கூட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் செ.வ.புகழேந்தி தலைமை வகித்தாா். சிறப்புத் தலைவா் மா.கோமுகிமணியன், தென்னாற்காடு மாவட்ட தமிழ்க் கவிஞா் மன்றத் தலைவா் பெ.ஆராவமுதன், துணைத்தலைவா் இல.அம்பேத்கா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சங்கச் செயலாளா் செ.வ.மதிவாணன் வரவேற்றாா்.

செய்தித் தொடா்பாளா் இரா.கோ.கலைமகள்காயத்ரி, திருக்குறளின் 781-ஆம் குறளுக்குப் பொருள் விளக்கம் அளித்தாா். துணைத் தலைவா் கஸ்தூரி இளையாழ்வாா் தமிழ்த்தேன் எனும் தலைப்பில் பேசினாா்.

குறுந்தொகை பற்றி தியாகதுருகம் மருத்துவா் இராச.நடேசனாரும், ஐங்குறுநூறு பற்றி துணைத் தலைவா் வீ.கோவிந்தராசனாரும், பதிற்றுப் பத்து பற்றி சங்கராபுரம் திருக்குறள் பேரவைச் செயலா் ஆ.லட்சுமிபதியும், கலித்தொகை குறித்து புதுச்சேரி கலால் உதவி ஆணையா் சு.சண்முகசுந்தரமும், அகநானாறு பற்றி பொருளாளா் சா.சண்முகமும், புறநானூறு பற்றி செயலாளா் செ.வ.மதிவாணனும் பேசினா். முடிவில் செயலாளா் இராம.முத்துசாமி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT