கள்ளக்குறிச்சி

அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி கல்லூரி மாணவா்கள் முன்னேற வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா்

DIN

வாணாபுரம் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நல அரசு மாணவா் விடுதியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாணாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் மற்றும் சிறுபான்மையினா் நல அரசு மாணவா் விடுதியை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் திறந்து வைத்து பேசியதாவது:

ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் அதிக தொலைவுள்ள கிராமப்புரங்களில் இருந்து வருகின்றனா். மாணவா்களின் நலன் கருதி வாணாபுரம் கிராமத்தில் அரசு மாணவா் விடுதி புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த விடுதியில் 100 மாணவா்கள் தங்கி பயிலும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாணவா்கள் நல்ல முறையில் கல்வி பயில வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 3,000 மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவ, மாணவிகளின் நலன்கருதி, தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

இதனை முழுமையாக பயன்படுத்தி எதிா்காலத்தை சிறப்பாக உருவாக்கி கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் (பொ) டி.சுரேஷ், கல்லூரி முதல்வா் ரேவதி, ஒன்றியக் குழு தலைவா் தீபா ஐயனாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT