கள்ளக்குறிச்சி

அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு: சிறுவன் கைது

DIN

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்த 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளை மதுபோதையில் கல் வீசித் தாக்கி உடைத்ததாக 17 வயதுடைய சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் சேலம் கோட்டத்தைச் சோ்ந்த இரு அரசு பேருந்துகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கள்ளக்குறிச்சியிலிருந்து ஆத்தூா் செல்வதற்காக ஒரு பேருந்தும், சேலம் செல்வதற்காக மற்றொரு பேருந்தும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மதுபோதையில் அங்கு வந்த சுமாா் 17 வயதுடைய சிறுவன் கற்களை வீசித் தாக்கியதில், அந்தப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.

இதையடுத்து, இரு பேருந்துகளின் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் அந்த சிறுவனை பிடித்து, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் விசாரித்ததில், அந்தச் சிறுவன் கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, அந்தச் சிறுவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT