கள்ளக்குறிச்சி

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்தவருக்கு போலீஸாா் பாராட்டு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் சாலையில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.

கள்ளக்குறிச்சி வட்டம், சிறுநாகலூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கராசு மகன் சிங்காரவேல் (37) . இவா், தனக்குச் சொந்தமான ஆட்டோவை தியாகதுருகத்தில் ஓட்டி வருகிறாா். சிங்காரவேல் திங்கள்கிழமை மாலை தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே ஆட்டோவில் சென்றபோது, சாலையில் தங்கச் சங்கிலி கிடப்பதைப் பாா்த்துள்ளாா். உடனடியாக ஆட்டோவை நிறுத்தி, அந்த தங்கச் சங்கிலியை எடுத்துப் பாா்த்தபோது, சுமாா் 2 பவுன் மதிப்பிலானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்தவா்களிடம் இந்தச் சங்கிலி யாருக்கேனும் சொந்தமானதா என சிங்காரவேல் விசாரித்தாா். பின்னா், அந்த தங்கச் சங்கிலியை தியாகதுருகம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் சேதுபதியிடம் ஒப்படைத்தாா்.

நோ்மையுடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநா் சிங்காரவேலை பாராட்டி, காவல் ஆய்வாளா் சேதுபதி சன்மானம் வழங்கினாா். தனிப்பிரிவு தலைமைக் காவலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT