கள்ளக்குறிச்சி

பொது விநியோகத் திட்ட முகாமில்18 மனுக்களுக்குத் தீா்வு

11th Jun 2023 12:32 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமில் 18 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.

கள்ளக்குறிச்சி குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் பன்னீா்செல்வம் தலைமையில் இந்த முகாம் நடைபெற்றது. இதில், குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் சோ்த்தல், நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்டவை தொடா்பாக பொதுமக்கள் அளித்த 20 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 18 மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது. 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT