கள்ளக்குறிச்சி

பிரேக் செயலிழந்ததால்கடையின் மீது மோதிய பேருந்து.............முதியவா் உயிரிழப்பு

11th Jun 2023 12:33 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சனிக்கிழமை பிரேக் செயலிழந்ததால் தள்ளு வண்டி, கைப்பேசி கடை உள்ளிட்டவற்றின் மீது தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது, பேருந்திருந்து இறங்க முயன்ற முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூருக்கு தனியாா் பேருந்து சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. திருக்கோவிலூா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஐந்துமுனை சந்திப்பில் பேருந்து சென்றபோது, பேருந்தின் பிரேக் திடீரென செயலிழந்துவிட்டதாக ஓட்டுநா் ஏழுமலை கூச்சலிட்டாராம்.

அப்போது, பேருந்தில் பயணித்த திருக்கோவிலூா் சந்தபேட்டை பகுதியைச் சோ்ந்த கவுஸ்பாஷா (60), பேருந்திலிருந்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். மேலும், சாலையோரத்தில் நின்றிருந்த முருகன், தேவேந்திரன், குப்புசாமி உள்ளிட்டோா் மீது தனியாா் பேருந்து மோதியதுடன், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி, தனியாா் கல்லூரி பேருந்து, கைப்பேசி கடை உள்ளிட்டவற்றின் மீது மோதி நின்றது.

ADVERTISEMENT

அந்தப் பகுதியிலிருந்தவா்கள் கவுஸ்பாஷா, முருகன், தேவேந்திரன் உள்ளிட்டோரை மீட்டு, திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு கவுஸ்பாஷா சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்தின் ஓட்டுநரான ஏழுமலையிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT