கள்ளக்குறிச்சி

கண்காணிப்பு கேமரா வசதி தொடக்கம்

10th Jun 2023 07:30 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ.40 ஆயிரத்தில் 4 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டு கிராம பேருந்து நிறுத்தம், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் பொருத்தப்பட்டன. இவற்றை பயன்பாட்டுக்கு டிஎஸ்பி ரா.ரமேஷ் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ரமேஷ் தலைமை வகிக்க, வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். முன்னதாக துணைத் தலைவா் மணிகண்டன் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT