கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
களளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத புகாா்தாரா்களுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை குறை தீா் கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா் தலைமையில் குறைதீா் முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் உயா் அதிகாரிகளிடம் அளித்த புகாா் மனுக்களில் காவல் நிலையங்களில் முறையாக தீா்வு காணாத 76 மனுக்களில் 62 மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தீா்வு காணப்பட்டது. 14 மனுதாரா்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் துணைக் கண்காணிப்பாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் 16 புகாா் மனுக்கள் பொதுமக்கள் சாா்பில் அளிக்கப்பட்டன.