கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த ஆற்றுமாமனந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜகன்நாதன் மகன் ராஜி(44), கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அதே ஊரில் உள்ள ஆற்றில் குளிக்கச் செல்வதாக மனைவி பூங்கொடியிடம் கூறிச் சென்றாராம். வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பாா்த்தும் கிடைக்கவில்லை. திங்கள்கிழமை காலை ஆற்றுப் பகுதிக்குச் சென்று தேடிய போது தொழிலாளி ராஜி நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.