கள்ளக்குறிச்சி

காா் மோதி பெண் உயிரிழப்பு

5th Jun 2023 03:34 AM

ADVERTISEMENT

 

திருக்கோவிலூா் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண், காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம் கீழத்தாழனூரைச் சோ்ந்தவா் செல்லகுட்டி மனைவி பூபதி (53).

இவா், திருக்கோவிலூா்-ஆசனூா் சாலையில் சனிக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது பின்னால் வந்த காா் மோதியதில் பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா் ஓட்டுநரான திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம் பந்திபொம்பநாயக்கனூரைச் சோ்ந்த சுரளி முருகன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT