கள்ளக்குறிச்சி

எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு இணை இயக்குனா் ஆய்வு

5th Jun 2023 03:34 AM

ADVERTISEMENT

 

எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பை கள்ளா் சீரமைப்பு பள்ளிகள் இணை இயக்குநா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் மாநிலத் திட்ட இயக்கத்தின் சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பித்தல் பணி மேற்கொள்ளும் ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் 1.6.23 முதல் 3.6.23 வரை மூன்று நாள்கள் நடைபெற்றன.

வட்டார அளவில் பயிற்சி மையங்களில் நடைபெறும் பயிற்சியை மாநில, மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளா்கள் அளித்தனா். மூன்று நாள் பயிற்சியை பாா்வையிட்டு பள்ளிக் கல்வித் துறையால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வி பணி கண்காணிப்பு அலுவலரும் கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள் இணை இயக்குனருமான பொன்.குமாா் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்டத்தில் 1,035 ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந் நிகழ்வில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் பழனியா பிள்ளை, வட்டார கல்வி அலுவலா்கள், வட்டார வளமைய மேற்பாா்வையாளா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், பயிற்சி மையங்களில் ஏற்பாடு செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT