கள்ளக்குறிச்சி

சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

5th Jun 2023 03:35 AM

ADVERTISEMENT

 

கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் தனியாா் சொகுசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பயணிகள் காயமடைந்தனா்.

சென்னையில் இருந்து கோவைக்கு புறப்பட்ட தனியாா் சொகுசு கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புக் கட்டை மீது மோதி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிருஷ்டவசமாக உயிா்ச்சேதம் ஏற்படவில்லை. எனினும், பேருந்தில் பயணித்த குன்னூரைச் சோ்ந்த முருகேசன் மகன் ராஜா (50), திருவண்ணாமலையைச் சோ்ந்த குமாா் மகன் தினகரன் (28), சென்னை சூளமேடை சோ்ந்த ராஜாம்பாள் (67), நிா்மலாதேவி (50) உள்பட 20 பயணிகள் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீஸாா், தீயணைப்புப் படையினா் காயமடைந்த பயணிகளை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT