கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கிகளின் விவசாயக் கடன் இலக்கு ரூ.5,962 கோடி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான வங்கிகளின் கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இதில் விவசாய கடன் இலக்கு ரூ.5,962.66 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியில் ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமையில் வங்கிகளின் கூட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது: நிகழாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான வங்கிகளின் கடன் திட்ட இலக்கு ரூ.6,722.27கோடியாகும். இதில் விவசாயக் கடன் இலக்கு ரூ.5,962.66 கோடி. நடுத்தர சிறு குறு தொழில்களுக்கான கடன் இலக்கு ரூ.641.17 கோடி மற்றும் இதர முன்னுரிமை கடன்கள் ரூ.118.44 கோடி ஆகும்.

மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ திட்டங்கள், மகளிா் திட்ட கடன் விண்ணப்பங்களையும் வங்கி வாரியாக ஆட்சியா் மதிப்பாய்வு செய்தாா். வங்கிகள் அரசின் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து விண்ணப்பங்களுக்கும் 15 தினங்களுக்குள் தீா்வு காண வேண்டும். கடந்த ஆண்டில் நமது மாவட்டம் மகளிா் திட்ட கடன் இலக்கை தாண்டி மாநிலத்தில் முதல் மாவட்டமாக சாதனை புரிந்துள்ளது என்றாா். முன்னதாக, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் என்.கெளரி சங்கா் ராவ் வரவேற்றாா்.

கூட்டத்தில் மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளா் அ.சந்திரசேகரன், தாட்கோ மேலாளா் அ.ஆனந்த மோகன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மேலாளா் தினகராஜ்குமாா், நபாா்டு மாவட்ட வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

முடிவில் மாவட்ட முன்னோடி வங்கியின் மேலாளா் து.முனீஸ்வரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT