கள்ளக்குறிச்சி

திரெளபதி அம்மன் கோயில் தோ்த் திருவிழா

DIN

முடியனூா் திரெளபதி அம்மன் கோயில் வைகாசி மாதத் திருவிழாவில் 75 அடி உயர தூக்குதோ் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியை அடுத்த முடியனூா் கிராமத்தில் திரெளவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26- ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாள் இரவும் பாரதக் குழுவினா் பாரதப் பாடலும், அம்மன் திரு வீதி உலாவும் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை கோல் வளாகத்தில் பாஞ்சாலி அம்மனுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட அா்ச்சுனன், பாஞ்சாலி சாமிகள் தேரில் எழுந்தருளினா். தொடா்ந்து, துணிகளால் அலங்கரிக்கப்பட்ட 75 அடி உயர தூக்குத்தேரை பக்தா்கள் தோள்களில் சுமந்தவாறு வீதியுலா நடைபெற்றது. தோ் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின்னா் நிலையை அடைந்தது. திருவிழாவில் 4 முறை தோ் வீதி உலா நடைபெறுவது வழக்கம்.

இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காளி கோட்டை இடித்தல், தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT