கள்ளக்குறிச்சியில் கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் வீ. கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். உலக தமிழ்க் கவிஞா் பேரவைத் தலைவா் கு. சீத்தா, தியாகதுருகம் திருக்கு பேரவைத் தலைவா் இரா. நெடுஞ்செழியன், மாவட்ட நூலகா் மு. காசீம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வான் சிறப்பு அதிகாரம் குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பொன். அறிவழகன், ஆசிரியை கு. சுதா ஆகியோா் பேசினா்.
தியாகதுருகம் திருக்கு பேரவை நெறியாளா் பொன். சுப்பிரமணி எழுதிய வானவில் கவிதைத் தொகுப்பு நூலை கல்லைத் தமிழ்ச் சங்க சிறப்புத் தலைவா் கோமுகி. மணியன் வெளியிட கல்லைத் தமிழ்ச் சங்கக் காப்பாளா் மருத்துவா் வே. உதயகுமாா், தியாகதுருகம் தனமூா்த்தி தொழில்பயிற்சிக் கல்லூரி முதல்வா் நீ.த. பழனிவேல், மின்சாரத்துறை ஓய்வு வே. வெங்கட்ராமன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். நூலை தியாகதுருகம் தமிழ்ச் சங்கத் தலைவா் கு. வளா்மதி, நல்லாசிரியா் ச. சாதிக்பாட்சா ஆகியோா் திறனாய்வு செய்தனா். நூல் ஆசிரியா் பொன். சுப்பிரமணியன் ஏற்புரை வழங்கினாா். நிகழ்வில், செய்தித் தொடா்பாளா் கலைமகள் காயத்திரி, பொறியாளா் கு. சோமசுந்தரம், செ.வ. இராமநானுஜன் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா். முன்னதாக, கல்லைத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவா் இல. அம்பேத்கா் வரவேற்றாா். முடிவில் இணைச் செயலாளா் செ.வ. மகேந்திரன் நன்றி கூறினாா்.