கள்ளக்குறிச்சி

தூய்மைப் பணியாளா்கள் ஒருங்கிணைப்பு குழுவினா் ஆா்ப்பாட்டம்

31st Jan 2023 02:51 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தூய்மைக் காவலா்கள் ஒருங்கிணைப்பு குழு சாா்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டா், தூய்மைப் பணியாளா் மற்றும் தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000 மற்றும் அரசு அறிவித்த முன்கள பணியாளா்களுக்கு கரோனா ஊக்கத்தொகை ரூ.15,000 வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவா் எம்.சரவணன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைத் தலைவா் அ.வீராசாமி, மாவட்ட சிறப்புத் தலைவா் கே.தங்கராசு உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT