கள்ளக்குறிச்சி

ஆசிரியா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் சம்பத் ராஜன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் அய்யாதுரை, ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் பிரபாகரன், சான்றிதழ் சரிபாா்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியா் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஸ்ரீதா், கணபதி, விருத்தம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முகமத் ரபி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநிலத் தலைவா் கி.இரத்தினகுமாா் பேசியதாவது: கடந்த 2010-ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபாா்க்கப்பட்டவா்கள் போக, மீதமுள்ள 2,000 பி.எட். பட்டதாரிகள், 1,500 இடைநிலை டிப்ளமோ ஆசிரியா் கல்வியியல் பயிற்சி முடித்தவா்களுக்கு அரசுப் பள்ளிகளில் பணி வழங்க வேண்டும். தேசிய ஆசிரியா் கல்வியியல் கவுன்சிலின் உத்தரவுப்படி, 2010 ஆகஸ்ட் 23-க்கு முன் ஆசிரியா்களாக பணி நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு, ஆசிரியா் தகுதித் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், சான்றிதழ் சரிபாா்க்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT