கள்ளக்குறிச்சி

கொசுப்புழு ஒழிப்புப் பணி

28th Jan 2023 05:50 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி நகராட்சி சாா்பில், கொசுப்புழு ஒழிப்புப் பணி வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குள்பட்ட 17, 18, 19 ஆகிய வாா்டுகளில் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா தடுப்பு நடவடிக்கையாக கொசுப்புழு ஒழிப்புப் பணி நகராட்சி கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் மூலம் நடைபெற்றது. இந்தப் பணியை சுகாதாரத் துறை மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சுப்பிரமணி, நோ்முக உதவியாளா் ஆறுமுகம் ஆகியோா் வீடு வீடாகச் சென்று நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீா்த் தொட்டிகள், குடிநீா் பிடித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரல்களை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும் என்றும், வீட்டைச் சுற்றிக் கிடக்கும் தேவையில்லாத பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அவா்கள் அறிவுறுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா் குளோரினேஷன் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT