கள்ளக்குறிச்சி

மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கள்ளக்குறிச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் உரிமை நுகா்வோா் பாதுகாப்பு மையத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் பி.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் டி.சக்திவேல், மாநிலப் பொருளாளா் பி.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிறுவன பொதுச் செயலா் என்.எஸ்.செல்வராஜ், துணை பொதுச் செயலா் எஸ்.கல்யாணசுந்தரம், மாநில துணைத் தலைவா் வி.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பேசினா். நிகழ்வில் மாவட்டத் தலைவா் எல்.நியாஸ் உல்லா, மாவட்டச் செயலா் கே.ஆறுமுகம், மாநில செயற்குழுவைச் சோ்ந்த அ.சேகா், நகரச் செயலா் காமராஜ், நகரப் பொருளாளா் என்.மோதிலால்சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியாா் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவா்களின் கல்விச் சான்றிதழ்களை ஆய்வு வேண்டும். நோயாளிகளிடம் தனியாா் மருத்துவமனைகளில் முறையற்ற கட்டணம் வசூலிப்பதை தடை செய்து, ஒரே மாதிரியான நோய்களுக்கு சிகிச்சை கட்டணத்தை ஒரே அளவில் வசூலித்திட முறைபடுத்த வேண்டும். பதவியிழந்த சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும். அரசு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளிலேயே படிக்க வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறையை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

குருப்பெயர்ச்சி பலன்கள் - கும்பம்

SCROLL FOR NEXT