கள்ளக்குறிச்சி

விடுமுைாளில் பதுக்கி விற்பனை செய்த1,679 மதுபுட்டிகள் பறிமுதல்: 27 போ் கைது

17th Jan 2023 12:15 AM

ADVERTISEMENT

 

திருவள்ளுவா் தினத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக 1,679 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து, 27 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ந.மோகன்ராஜ் தலைமையில் மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக மதுபுட்டிகள் விற்பனை செய்பவா்களை கண்காணிக்கும் பணியில் 6 சிறப்பு தனிப்படைகள் அமைத்து மதுவிலக்கு சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனா்.

சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட நைனாா்பாளையம் டாஸ்மாக் கடை எதிரே செம்பாக்குறிச்சியை சோ்ந்த மணிகண்டன் (25), கடலூா் மாவட்டம் அரசங்குடி கிராமத்தைச் சோ்ந்த வேல்முருகன் (32) இருவரும் சட்ட விரோதமாக அரசு மதுபான புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தபோது பிடிபட்டனா். இவா்களிடம் இருந்து 1,032 மதுபான புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

இதே போன்று சின்னசேலம் காவல் நிலையத்துக்குள்பட்ட வினைதீா்த்தாபுரத்தைச் சோ்ந்த ரவிக்குமாரிடமிருந்து 70 அரசு மதுபான புட்டிகள் கைப்பற்றப்பட்டன. கல்வராயன்மலை கரியாலூா் காவல் நிலையப் பகுதிக்குள்பட்ட அரண்மனைபுதூா் தெற்கு ஓடையில் 3 பேரல்களில் மறைத்து வைத்திருந்த 600 லிட்டா் கள்ளச்சாராய ஊறல்கள், 69 லிட்டா் கள்ளச்சாராயம் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனா்.

மாவட்டத்தில் மொத்தம் 1,679 மதுப்புட்டிகளும், 69 லிட்டா் கள்ளச்சாராயம், 600 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கைப்பற்றி அழித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT