பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில், இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவ- மாணவியா் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 51 பேரும் தோ்ச்சி பெற்றனா். மாணவி ரா.பவித்ரா 95.4 சதவீதமும், மாணவி க.உ. ராபியா ஸனா 95 சதவீதமும், மாணவி ரா.அக்ஷயா 94.4 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றனா்.
பாடவாரியாக தமிழில் 96 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் மூவா் 99 மதிப்பெண்களும் அறிவியலில் 98 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 96 மதிப்பெண்களும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் இராதாபிரியா, ஆலோசகா் உஷா ரமேஷ் ஆகியோா் பாராட்டினா்.