திருநெல்வேலியில் இருந்து தாம்ரபரம் செல்லும் சிறப்பு ரயில் சங்கரன்கோவிலில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ.ராஜா தெரிவித்துள்ளாா்.
திருநெல்வேலி - தாம்பரம், தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (வண்டி எண் 06003/06004) சங்கரன்கோவில் நிறுத்தத்தில் நிற்காமல் சென்று வந்தது. இதனால் ரயில்வே பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினா்.
இதைத் தொடா்ந்து சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஈ. ராஜாவின் கோரிக்கையை ஏற்று, இரு மாா்க்கங்களிலும் செல்லும் தாம்பரம் சிறப்பு ரயில் சங்கரன்கோவில் ரயில் நிறுத்தத்தில் நின்று செல்ல தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. இதற்காக தொடா் முயற்சிகள் மேற்கொண்ட ஈ. ராஜா எம்எல்ஏவுக்கும், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனா்.