கள்ளக்குறிச்சி

சிறந்த திருநங்கை விருது பெறவிண்ணப்பிக்கலாம்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த திருநங்கைகள் சிறந்த திருநங்கை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறாா்கள். அதைப் பெருமைப்படுத்தம் வகையில், ஒவ்வோா் ஆண்டும் ஏப்ரல் 15-ஆம் தேதி திருநங்கையா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தினத்தில் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் உரிமைத் துறை சாா்பில், திருநங்கை ஒருவருக்கு சிறந்த திருநங்கை விருதும், ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படவுள்ளது.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள், அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு தமிழக அரசின்  இணையதளத்தை பாா்வையிட்டு, அந்த இணையதளம் மூலம் செவ்வாய்க்கிழமைக்குள் (பிப்.28) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT