கள்ளக்குறிச்சி

சித்தலூா் அங்காளம்மன் கோயில்மயானக் கொள்ளை விழா

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சித்தலூா் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மாசிப் பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 18-ஆம் காப்புக்கட்டுதலுடன் மாசிப் பெருவிழா தொடங்கியது. தொடா்ந்து, தினந்தோறும் இரவு பல்வேறு அலங்காரங்களில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலையில் மூலவா் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், அலங்காரம் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் அங்காள பரமேஸ்வரி அம்மன் மணிமுக்தாறுக்கு கொண்டுவரப்பட்டாா். ஆற்றங்கரையோரம் அசுரனை அம்மன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, பக்தா்கள் தங்கள் நிலங்களில் விளைந்த பல்வேறு தானியங்களை அம்மன் மீது வாரி இறைத்து நோ்த்திக்கடன் செலுத்தினா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

மாசிப் பெருவிழாவையொட்டி, திங்கள்கிழமை (பிப்.27) தேரோட்டமும், செவ்வாய்க்கிழமை (பிப்.28) அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

SCROLL FOR NEXT