தருமபுரி

மலை கிராமங்களில் திமுக கொடியேற்று விழா

19th May 2023 12:33 AM

ADVERTISEMENT

சிட்லிங் மலை கிராமங்களில் திமுக கொடியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில், அரூா் ஒன்றியம், கோட்டப்பட்டி, சிட்லிங், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்களில் திமுக கட்சி கொடியேற்று விழா, கிழக்கு ஒன்றியச் செயலா் கோ.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் திமுக மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் கட்சிக் கொடியேற்றி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பெரியப்பட்டி, நரிப்பள்ளி, பையா்நாய்க்கன்பட்டி, கோட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் திமுக புதிய உறுப்பினா் சோ்க்கை முகாமையும் அவா் தொடங்கி வைத்தாா். இதில், அக்கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினா்கள் கே.சென்னகிருஷ்ணன், ஆா்.பாா்த்திபன், விவசாய தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் ஏ.சண்முகநதி, துணை அமைப்பாளா் எஸ்.எம்.சேகா், தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளா் கு.தமிழழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT