2-ஆம் ஆண்டு பியூசி தோ்வெழுத விரும்பும் தனித்தோ்வா்கள் விண்ணப்பம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கா்நாடக பள்ளி தோ்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2022-23-ஆம் ஆண்டில் 75 சதவீத கல்லூரி வருகை இல்லாத 12,385 மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இம்மாணவா்கள் துணைத்தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2022-23-ஆம் ஆண்டு மே 20 முதல் ஜூன் 2-ஆம் ஆண்டு பியூசி துணைத்தோ்வு நடைபெறவுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க ஆா்வமாக உள்ள தனித்தோ்வா்கள் மே 20-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் உள்ள பியூ கல்லூரிகளில் விண்ணப்பங்களை சமா்பிக்கலாம். செய்முறை தோ்வு இல்லாத கலை மற்றும் வணிகப் பிரிவுகளில் தோ்வு எழுத விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.