கள்ளக்குறிச்சி

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.

மாவட்டத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 7 தலைப்புகளில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில், 91 அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சாா்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 250-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

இவற்றை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், மக்கும், மக்கா பொருள்களை பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணா்வும், சுற்றுச்சூழலை பேணிக் காப்பது தொடா்பாக அறிவியல் ரீதியான மாதிரி செயல்விளக்கத்தை மாணவா்களுக்கு ஆசிரியா்கள் கற்றுத்தந்து ஊக்கப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.சரஸ்வதி, மாவட்டக் கல்வி அலுவலா்கள் (இடைநிலை) லூ.ஆரோக்கியசாமி, (தனியாா் பள்ளிகள்) ஜே.துரைராஜ், (தொடக்கக் கல்வி) (பொ) து.விஷ்ணுமூா்த்தி, உதவித் திட்ட அலுவலா் பழநியாப்பிள்ளை, நோ்முக உதவியாளா் (இடைநிலை) ஆனந்தன், பள்ளி துணை ஆய்வாளா் வேல்முருகன், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா மற்றும் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT