திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை வந்த அவருக்கு விமான நிலையத்தில் முன்னாள் மக்களவை உறுப்பினா் ப.குமாா், முன்னாள் அமைச்சா் மு.பரஞ்சோதி, மாநில எம்.ஜி.ஆா். இளைஞா் அணி இணைச் செயலாளா் சீனிவாசன் ஆகியோா் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கழக அமைப்புச் செயலாளா் டி.ரத்தினவேல், முன்னாள் அமைச்சா்கள் வளா்மதி, சிவபதி, மாவட்ட அவைத் தலைவா் ஐயப்பன், ஆா். மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதனைத் தொடா்ந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியாா் விடுதியில் எடப்பாடி கே. பழனிசாமி கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். மீணடும் இரவு 10 மணிக்கு திருச்சிக்கு வந்து விமானத்தில் சென்னை திரும்பினாா்.