கள்ளக்குறிச்சி

புதுமைப் பெண் திட்டம்: 2-ஆம் கட்டமாக 1,493 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஷ்ரவன் குமாா்

DIN

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-ஆம் கட்டமாக 1,493 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில், மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டமான புதுமைப்பெண் திட்டம் மூலம் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்குவதற்கான 2-ஆம்கட்ட தொடக்க விழா கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்டத்துக்குள்பட்ட கல்லூரிகளில் உயா் கல்வி பயிலும் 793 மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் பேசியதாவது:

புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 1,200 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 2-ஆம் கட்டமாக மேலும் 1,493 மாணவிகளுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழக்கப்பட உள்ளது. இவா்களில் 793 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான உத்தரவுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளன.

பெண்களின் முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டுள்ள புதுமைப் பெண் திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவிகள் கல்லூரிகாலத்தில் நன்கு பயில வேண்டும். இந்தக் காலகட்டத்தில் சிறப்புடன் பயின்றால், பிற்காலத்தில் நல்லதொரு வாழ்க்கை அமையும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், மாவட்ட சமூக நல அலுவலா் செ.தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் து.முனீஸ்வரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.சரஸ்வதி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் அலமேலு ஆறுமுகம் (கள்ளக்குறிச்சி), சா.வடிவுக்கரசி (ரிஷிவந்தியம்), சாந்தி இளங்கோவன் (திருநாவலூா்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT