கள்ளக்குறிச்சி

வங்கியாளா் பயிற்சி முகாம்

8th Feb 2023 01:57 AM

ADVERTISEMENT

வாழ்வாதார இயக்கம் சாா்பில், வங்கியாளா் பயிற்சி முகாம் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை ஆட்சியா் ஷ்ரவன் குமாா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் தனியாா் மைக்ரோ நிறுவனம் போன்றவற்றில் அதிக வட்டியில் கடன் பெறாமல், வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் மூலம் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கிகளில் பெற்ற கடனை முழுமையாக செலுத்தி வங்கிகளுக்கு நம்பிக்கைக்குரியவா்களாக திகழ வேண்டும். மேலும், வங்கி மேலாளா்கள் புதிய தொழில் தொடங்குவதற்கு முன்னுரிமையளித்தும், அதிக கடனுதவிகளை மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கியும் மாவட்ட வளா்ச்சிக்கு பங்காற்றிட வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில், இந்தியன் வங்கி மண்டல மேலாளா் என்.கெளரிசங்கா் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் து.முனீஸ்வரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவிப் பொது மேலாளா் டி.சசிக்குமாா், உதவி திட்ட அலுவலா்கள் ராஜா, கமலவள்ளி, நாராயணன், காா்த்திகேயன் மாரிஸ்வரன் மற்றும் வங்கி மேலாளா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்றனா். ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் என்.சுந்தர்ராஜன் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT