கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலை ஒன்றியக் கிராமங்களில் பாலங்கள், சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

கல்வராயன்மலை ஒன்றியத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் ஷ்ரவன் குமாரிடம் சாலை, பாலம் அமைக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியப் பகுதி பழங்குடியின மக்கள் முழுமையாக வாழும் பகுதியாகும். இப் பகுதிகளில் பழுதடைந்த நிலையில் சாலைகள் உள்ளன. இவற்றை சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தீா்மானத்தின்படி அனுப்பியுள்ளனராம். அவற்றை விரைவில் தாா்ச்சாலையாக நெடுஞ்சாலைத்துறை மூலம் போடுவதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இன்னாடு முதல் வெள்ளரிக்காடு வரை உள்ள சாலை, தாழ்வெள்ளி மலை முதல் கொட்டபுத்தூா், மணியாா்பாளையம், நக்கவளவு வரை, சேராப்பட்டு முதல் தடுத்தானன்பாளையம் சாலை, வஞ்சிக்குழு முதல் பெரும்பூா் சாலை, கொடுந்துரை முதல் ஆலத்திசாலை, களாக்காடு முதல் கூடாரம்வரை, கன்னூா் பிரிவு முதல் கன்னூா்சாலை, பன்னிபாடி முதல் மாயம்பாடி சாலை, மேல்வாழப்பாடி முதல் தாழ்தேவனூா்சாலை உள்ளிட்ட 12 இடங்களில் சாலைகள் பழுதடைந்துள்ளன.

இதேபோல் அத்திப்பாடி - வெள்ளரிக்காடு சாலையில் உள்ள குடமாத்தி ஓடையில் பாலம், தும்பராம்பட்டு- சேராப்பட்டு ஊராட்சியில் பாலம், மல்லியம்பாடி-பொட்டியம் பாலம், துரூா்-புதுபாலப்பட்டு பாலம், பட்டறைக்கொட்டாய்-வெள்ளிமலை பாலம், கூடாரம்-கிளாக்காடு பாலம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் பாலங்கள் அமைக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் கல்வராயன்மலை ஒன்றியப் பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

SCROLL FOR NEXT