கள்ளக்குறிச்சி

விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்றுகள்

7th Feb 2023 02:22 AM

ADVERTISEMENT

வரதப்பனூா் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின்கீழ் வேளாண்மைத் துறை சாா்பில் 300 விவசாயிகளுக்கு 600 தென்னங்கன்றுகள் திங்கள்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

கள்ளக்குறிச்சியை அடுத்த வரதப்பனூா் ஊராட்சியில் கலைஞா் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண்மைத்துறையின் மூலம் 300 விவசாயிகளுக்கு இலவசமாக 600 தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் க.சிவபாக்கியம் தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் பழனிசாமி, அமிா்தலிங்கம், சிவா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 300 விவசாயிகளுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊராட்சிச் செயலாளா் வே.முருகேசன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், விவசாயிகள் பலரும் பங்கேற்றனா். முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவி ரா.ஜான்சிராணி நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT