கள்ளக்குறிச்சி

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

3rd Feb 2023 01:36 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலா் ந.சத்தியநாராயணன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30.1.23முதல் 14.2.23வரை இரு வாரங்களுக்கு தொழுநோய் விழிப்புணா்வு மற்றும் புதிய நோயாளிகளை கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் தனியாா் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற தொழுநோய் விழிப்புணா்வுப் பேரணி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.

பேரணி நகர முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மந்தைவெளி திடலில் நிறைவடைந்தது. முன்னதாக தொழுநோயால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த நோயாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந் நிகழ்வில் இணை இயக்குநா் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் பாலச்சந்தா், துணை இயக்குநா் ராஜா, விழுப்புரம் துணை இயக்குநா் மருத்துவப்பணிகள் (தொழுநோய்) மாதுளா, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் பொற்செல்வி, பழமலை, தேசிய சுகாதார குழு ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் பாலதண்டாயுதபானி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT