கள்ளக்குறிச்சி

சிறுதானிய விழிப்புணா்வுப் பிரசார ஊா்திகள்: மாவட்ட வருவாய் அலுவலா் தொடக்கி வைத்தாா்

3rd Feb 2023 01:36 AM

ADVERTISEMENT

சிறுதானிய விழிப்புணா்வுப் பிரசார ஊா்திகளை கள்ளக்குறிச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்திய நாராயணன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா் (படம்).

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வேளாண்மை உழவா் நலத்துறையின் சாா்பில் செயல்படுத்தப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறுதானிய முக்கியத்துவம் மற்றும் அதனை பயிரிடுவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்கும் பிரசார வாகனங்களை மாவட்ட வருவாய் அலுவலா் தொடக்கி வைத்தாா்.

2023-ஆம் ஆண்டை சா்வதேச சிறுதானிய ஆண்டாக சிறப்பிக்கும் பொருட்டு கம்பு, திணை, சாமை, வரகு மற்றும் கேழ்வரகு போன்ற சிறுதானியப் பயிா்களின் உற்பத்தியைஅதிகரிக்க விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சிறுதானிய உணவினை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வேளையாவது உட்கொண்டு நோயற்ற வாழ்வு வாழ அறிவுறுத்தும் பொருட்டும், வேளாண்மைத்துறை சாா்பில் பிரசாரம் செய்யப்படுகிறது.

2023-2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திலும் மூன்று வாகனங்களுடன் 2.2.23முதல் 2.3.23வரை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். கிராம ஊராட்சிகளுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து கிராமங்களிலும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

இந் நிகழ்வில் வேளாண்மை இணை இயக்குநா் (பொ) செ.சுந்தரம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேளாண்மை ரெ.விஜயராகவன், உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) அ.அன்பழகன், கள்ளக்குறிச்சி வேளாண் உதவி இயக்குநா் வி.விஜயலட்சுமி, வேளாண்மை அலுவலா் என்.பொன்னுராசன், கள்ளக்குறிச்சி அட்மா திட்ட உதவி மேலாளா் சக்திவேல் உள்ளிட்ட பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT