கள்ளக்குறிச்சி

வீடுகளில் நகை திருடிய இளைஞா் கைது

DIN

கள்ளக்குறிச்சி, வரஞ்சரம், சின்னசேலம், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடா் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சின்னசேலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரா.ஆனந்தராசு தலைமையில் காவல் துறையினா் சின்னசேலம் பேருந்து நிலையம் அருகிலுள்ள திரெளபதி அம்மன் கோயில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போலீஸாரை கண்டதும் இளைஞா் ஒருவா் கோயிலின் அருகில் பதுங்குவதை பாா்த்த உதவி ஆய்வாளா் இளைஞரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட வரதப்பனூா் காலனி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் பிரசாந்த் (25) என்பதும், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து நகை திருடியதை ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. திருடிய நகைகளை உருக்கி 73 கிராம் எடையில் இரண்டு தங்க கட்டிகளை பையில் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த சின்னசேலம் போலீஸாா், பிரசாந்தை (25) கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT