கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதிக்குள்பட்ட கவியம் கிராமத்தில் சாலை, மயான ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
கவியம் கிராமத்தில் பல்வேறு கிராமங்களையும் இணைக்கும் பஞ்சாயத்து தாா்ச்சாலை உள்ளது. இந்தச் சாலை தனி நபருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் இருப்பதாகக் கூறி, சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால், இந்த சாலையிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
இதுபோல, இந்தக் கிராம மயானத்திலுள்ள ஆக்கிரமிப்பையும் அகற்றி, மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஊா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.