கள்ளக்குறிச்சி

1.80 டன் ரேஷன் அரிசி பதுக்கல்:இளைஞா் கைது

26th Apr 2023 06:31 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே 1.80 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

சின்னசேலம் வட்டம், எலியத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் செல்வராஜ் (38). இவா், அருகிலுள்ள பாண்டியங்குப்பம், நாககுப்பம், கல்லாநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, பதுக்கி வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் (பொ) மா.முரளிக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம்.

இதையடுத்து, அந்தப் பகுதியில் சோதனையிட்ட காவல் உதவி ஆய்வாளா் மா.முரளி தலைமையிலான போலீஸாா், பாண்டியங்குப்பத்தில் மளிகைக் கடையின் அருகே 22 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.80 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக செல்வராஜையும் போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT