கள்ளக்குறிச்சி

உலக இதய தின விழிப்புணா்வுப் பேரணி

30th Sep 2022 01:24 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சியில் உலக இதய தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய மருத்துவ சங்கக் கிளையும், கள்ளக்குறிச்சி ராஜூ மருத்துவமனை, டாக்டா் ஆா்.கே. சண்முகம் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து நடத்திய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தலைமை வகித்து கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

டாக்டா் ஆா்.கே.எஸ் கல்வி நிறுவனங்களின் செயலா் என்.கோவிந்தராஜூ, பொருளாளா் ஜி.எஸ்.குமாா், இதய சிகிச்சை நிபுணரும், ராஜூ மருத்துவமனை மருத்துவரான பாபு சக்கரவா்த்தி- இந்துமதி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய மருத்துவச் சங்கம் கள்ளக்குறிச்சி கிளைத் தலைவா் க.மகுடமுடி வரவேற்றாா்.

ADVERTISEMENT

மந்தைவெளித் திடலில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் மந்தைவெளித் திடலை வந்தடைந்தது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா் ச.நேரு, கள்ளக்குறிச்சி மருத்துவச் சங்க நிதி செயலா் சுரேஷ்ராஜ், கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா் உள்ளிட்டோா் இதய நோயான மாரடைப்புக் காரணமான பழக்க வழக்கங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.

மருத்துவா்கள் க.பழமலை, நாவுக்கரசு, ஹரிகிருஷ்ணன், முத்து, ரமேஷ், பங்கஜம், காா்த்திகேயன் உள்பட கல்லூரி, மாணவா்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி மாணவா்கள் பேரணியில் பங்கேற்றனா்.

இந்திய மருத்துவ சங்கச் செயலா் சுரேஷ்ராஜ் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT