கள்ளக்குறிச்சி

பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை

30th Sep 2022 01:24 AM

ADVERTISEMENT

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியரகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டம் ஆண்டு விழா மற்றும் ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தலைமை வகித்துப் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், கடந்த ஓராண்டுக்கு மேலாக 3,067 நபா்களுக்கு ரூ. ஒரு கோடியே 98 லட்சத்து 31,997 மதிப்பீட்டில் மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, இந்தத் திட்டத்தின் கீழ் பல்வேறு அறுவை சிகிச்சைகள் வாயிலாக குணமடைந்த 5 பேருக்கு சிகிச்சை குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்து, பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், 5 நபா்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய இரண்டு திட்ட ஒருங்கிணைப்பாளா்களுக்கு பாராட்டுக் கேடயம் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) மரு.பாலச்சந்தா், தேசிய சுகாதார குழும ஒருங்கிணைப்பாளா் மரு.செந்தில், திட்ட ஒருங்கிணைப்பாளா் சோ. சாமிநாதன், மாவட்ட கருவூல அலுவலா் இளங்கோ பிரபு உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT