கள்ளக்குறிச்சி

549 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்

28th Sep 2022 04:18 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் 549 பேருக்கு இலவச மிதிவண்டிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளியில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் தலைமை ஆசிரியா் ப.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக துணைத் தலைவா் ந.கலைச்செல்வன், செயலா் அ.அபுபக்கா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் அண்ணலட்சுமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பெற்றோா் ஆசிரியா் கழக இயக்குநா் வ.மணிமொழி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவரும், பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவருமான இரா.சுப்ராயலு மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

அப்போது அவா், அரசுத் தோ்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். படிப்பதற்கு வசதி இல்லாத மாணவா்களுக்கு வசதியை செய்து தருகிறேன் என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்வில் பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள் இரா.பழனிவேல், அ.அருண் கென்னடி, பள்ளி வளா்ச்சிக் குழு இயக்குநா் ஹெச்.அன்சா்அலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT