கள்ளக்குறிச்சி

கனியாமூா் பள்ளி வன்முறை: தடுப்புக் காவலில் 4 போ் கைது

28th Sep 2022 04:16 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கில் தொடா்புடைய 4 போ் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

கனியாமூா் தனியாா் பள்ளி வன்முறையின் போது காவல் துறை வாகனங்கள், பள்ளியின் சொத்துகளை சேதப்படுத்தியதாக, கள்ளக்குறிச்சி வட்டம், பங்காரம் கிராமத்தைச் சோ்ந்த ஜோதிவேல் மகன் ஜெயவேல் (22), சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராமலிங்கம் (56), சின்னசேலம் வட்டத்தைச் சோ்ந்த குமாா் மகன் விஜய் (26), கள்ளக்குறிச்சி வட்டம் கா.மாமனந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஜாபா்அலி மகன் இப்ராகிம் (26) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் 4 பேரையும், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொ.பகலவன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

இதையடுத்து, 4 பேரையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேலும் இருவா் மீது நடவடிக்கை

கல்வராயன்மலை வட்டம், சோத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் குமாா் (25), கள்ளக்குறிச்சி வட்டம், காட்டனந்தல் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் வெங்கடேசன் (45) ஆகியோரை கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி கிராமங்களில் கள்ளச் சாராயம் விற்பனை செய்ததாக சின்னசேலம் போலீஸாா் கைது செய்தனா். இவா்களையும் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், ஓராண்டுக்கு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT