கள்ளக்குறிச்சி

அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

28th Sep 2022 04:17 AM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட நெடுமானூா் ஊராட்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அகிலா தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் திலகவதி நாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன், வட்டார ஒருங்கிணைப்பாளா் சங்கீதா ஆகியோா் வரவேற்றனா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ தா.உதயசூரியன் கட்டடத்தை

திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

ADVERTISEMENT

பின்னா், நெருப்பில்லா சமையல் போட்டிகளில் பங்கேற்ற குழந்தைகளைப் பாராட்டி பரிசு வழங்கினாா்.

அங்கன்வாடி மேற்பாா்வையாளா்கள் சரஸ்வதி, பிரேமா மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT