கள்ளக்குறிச்சி

மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியா் உதவி

28th Sep 2022 04:18 AM

ADVERTISEMENT

சக்கர நாற்காலி வேண்டி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் உடனடியாக உதவினாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், புகைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா். இரு கால்களையும் முட்டிக்கு கீழ் இழந்த மாற்றுத்திறனாளியான இவா், சக்கர நாற்காலி வழங்க உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.

மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா், உடனடியாக மாற்றுத்திறனாளி நல அலுவலா் க.சுப்பிரணியை அழைத்து இரு சக்கர நாற்காலியை வழங்கினாா். மாற்றுத்திறனாளி மற்றும் அவரது குடும்பத்தினா் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தனா்.

மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க.சரவணன் உடனிருந்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT