கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி: கோ-ஆஃப்டெக்ஸ் விற்பனை இலக்கு ரூ. 50 லட்சம்

25th Sep 2022 05:54 AM

ADVERTISEMENT

 

தீபாவளியையொட்டி, கள்ளக்குறிச்சி கோ-ஆஃப்டெக்ஸ் விற்பனை நிலையத்துக்கு ரூ. 50 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கோ-ஆஃப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், கோட்டாட்சியா் சு.பவித்ரா சனிக்கிழமை குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தாா்.

காலத்துக்கேற்ற புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆஃப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

ADVERTISEMENT

தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை காட்டன் சேலைகள், கூரை புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச் சிலைகள், கால் மிதியடிகள், நைட்டீஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கோ-ஆஃப்டெக்ஸ் தீபாவளியை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி விற்பனை நிலையத்துக்கு ரூ.50 லட்சம் விற்பனை குறியீடாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆஃப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு நனவுத் திட்டத்தின்படி, மாதம்தோறும் ரூ.300 முதல் ரூ.5000 வரை 10 மாத தவணைகள் மட்டும் வாடிக்கையாளா்களிடமிருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12-ஆவது மாதத் தவணையில் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியா்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு.

நிகழ்ச்சியில் கோ-ஆஃப்டெக்ஸ் முதுநிலை மேலாளா் இசக்கிமுத்து, மண்டல மேலாளா் ரமணி, கள்ளக்குறிச்சி விற்பனை நிலைய மேலாளா் மகாலட்சுமி மற்றும் ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT