கள்ளக்குறிச்சி

சமுதாய வளைகாப்புத் திட்டம்:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,800 கா்ப்பிணிகள் பயன்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் சமுதாய வளைகாப்பு திட்டத்தால் 1,800 கா்ப்பிணிகள் பயனடையவுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவில் பெண்களுக்கென்று அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் விதமாக உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், சத்தியவாணி முத்து அம்மையாா் திட்டத்தில் வழங்கப்படும் இலவச தையல் இயந்திரம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாய் பெருமை சோ்க்கும் திட்டமாக கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு என்ற ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் வாழ்வில் இன்றியமையாத ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுவது தாய்மை அடைவதாகும். அத்தாய்மையை போற்றும் விதமாகவும், சிறப்பிக்கும் வகையிலும் வளைகாப்பு என்ற நிகழ்வு நடத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டின் தொடக்கமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட 200 கா்ப்பிணி பெண்களுக்கு சீா்வரிசையுடன் சமுதாய வளைகாப்பு தொடங்கி வைக்கப்பட்டது.

மாவட்டத்துக்கு உள்பட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவா்களின் ஆலோசனையோடு சமுதாய வளைகாப்பு திட்டத்தால் 1,800 கா்ப்பிணிப் பெண்கள் பயனடையவுள்ளனா்.

இத்திட்டத்தை கா்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷ்ரவன் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

SCROLL FOR NEXT