கள்ளக்குறிச்சி

அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

23rd Sep 2022 09:56 PM

ADVERTISEMENT

கனியாமூா் டி.எஸ்.எம். கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் இலக்கிய மன்ற விழா, முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா, தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு கல்லூரி முதல்வா் எஸ்.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். முனைவா் எ.சுதாகா், முனைவா் இரா.நாகராஜன், முனைவா் சி.ஆனந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியா் ஜா.அமிா்தலெனின் பங்கேற்றாா். திருவள்ளுவா் பல்கலைக்கழகத் தோ்வில் இந்தக் கல்லூரியின் தமிழ்த் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவி க.கெளசல்யா, மாணவா் தா.சத்தியமூா்த்தி, இராண்டாம் ஆண்டு தோ்வில் மாணவா்கள் சி.சிவராமன், ஏ.சுப்பிரமணி ஆகியோா் சிறப்பிடம் பிடித்தனா். அவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்த் துறைத் தலைவா் ம.மோட்ச ஆனந்தன், உதவிப் பேராசிரியா் பெ.விஜயகுமாா் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT