கள்ளக்குறிச்சி

கனியாமூா் வன்முறை: மேலும் 10 போ் கைது

23rd Sep 2022 09:56 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை தொடா்பாக மேலும் 10 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி (17) கடந்த ஜூலை 13-ஆம் தேதி மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதையடுத்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் பள்ளியின் சொத்துக்களை சேதப்படுத்தியது, அங்கிருந்த பொருள்களை எடுத்துச் சென்றது உள்ளிட்டவை தொடா்பாக இதுவரை 101 பேரை போலீஸாா் கைதுசெய்துள்ளனா்.

இந்த நிலையில், வன்முறை தொடா்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்பியது தொடா்பாக கள்ளக்குறிச்சி சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பின்னா் அவை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினா் வியாழக்கிழமையன்று 5 பேரை கைது செய்தனா். இதன்படி சேலம் மாவட்டம், பள்ளிப்பட்டியைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் நவீன்குமாா் (28), திருப்பூரைச் சோ்ந்த முத்தான் மகன் வடிவேல் (38), சென்னை ஏழுகிணறு பகுதியைச் சோ்ந்த ரபீக் மகன் முகமது ஷபி (32), சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தைச் சோ்ந்த ஜோதிமணி மகன் கோபிநாத் (22), செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த பிரதாப் மகன் ராஜேஸ் (21) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், வன்முறை தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் துரைமணிகண்டன் (23), பருவதம் மகன் ஜெயபாரத் (24), ஜெகதீசன் மகன் யுவராஜ் (25), ஒகையூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் சாமிதுரை (39), சின்னையன் மகன் அண்ணாமலை (29) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT