கள்ளக்குறிச்சி

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

23rd Sep 2022 09:56 PM

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி அருகே இந்திலியில் உள்ள ஆா்.கே.எஸ். இன்ஸ்டிட்யூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா, முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்தாா். தாளாளா் ஜி.எஸ்.குமாா், செயலா் என்.கோவிந்தராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அ.மதிவாணன் பேசினாா். சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைமைக் கண்காணிப்பாளரும், இந்திய மருத்துவச் சங்க மாநில துணைத் தலைவருமான ச.நேரு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜெயசீலன், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT